Sunday, March 29, 2009

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ !!!

நடக்க போவது நாடாளு மன்றதிற்கான தேர்தல். இங்கே மாநில கட்சிகளுக்கு என்ன வேலை.. இன்றைய நிலையில் மாநில கட்சிகளின் வுதவியின்றி எந்த அரசும் அமைக்க முடியாது.. இந்த நிலை வந்தது யாரால் ?

பாராளுமன்றத்தில் மாநில கட்சிகளின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது . ஐந்து அல்லது பத்து நாடாளு மன்ற வுறுப்பினரை கொண்ட கட்சிகளின் தலைவர்கள் கூட தேசிய தலைவர்களாய் சித்தரிக்க படுகின்றனர்.

நேரு , இந்திரா க்கு பிறகு ஒரு நல்ல தேசிய தலைவர் இல்லாதது நம் நாட்டின் துரத்ரிஷ்டம். இந்தியா இந்தியாவாக இருக்க நமக்கு வுடனடி தேவை ஒரு தேசிய தலைமை .. அது காங்கிரஸ் ஆகட்டும் அல்லது பாரதிய ஜனதா ஆகட்டும் .. இல்லையென்றால் மாநில தலைவர்களின் மகுடிக்கு அடங்கும் பாம்பாக தேசிய கட்சிகளின் நிலைமை மாறும்.

ஒரு தேசிய கட்சி அல்லது தேசிய தலைவர் நாட்டில் வுள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து செல்பவர்களாக இருக்க வேண்டும்.. ஜாதி , மதம் , இனம் என்று எந்த குறுகிய மனப்பான்மையும் இல்லாமல் - இந்தியன் என்ற வுனர்வோடு செயல் பட்டால் மாநில கட்சிகள் எல்லாம் காணாமல் போயி விடும். இல்லையென்றால் மாநில கட்சிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு நாள் நமது நாட்டுக்கு தீரா தலைவலியை தரும்.

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை ? நாடாளு மன்றத்தில் மாநில கட்சிகளுக்கு என்ன வேலை ? ஒன்று, நமது தேர்தல் ஆணையம் இந்த மாநில கட்சிகளை நாடாளு மன்ற தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.. அல்லது நின்றே தீருவேன் என்று அடம் பிடித்தால் , 543 இடத்திலும் வேட்பாளரை நிறுத்த சொல்ல வேண்டும்..

இல்லையென்றால் இரும்பு அடிக்கும் இடம் , ஈ அடிக்கும் இடமாக மாறி விடும்.. எச்சரிக்கை !!!

வாழ்க ஜனநாயகம் !!!

2 comments:

Anonymous said...

Anbare, neengal nehruvaiyum Indravayum deshiya thalivar yendru kooruneerkal.. nandru miga nadra.. aanal deva gowdavai maranthu viteere.. ;)

GANESHVEL MANIGANDHI said...

Anbare, vungal nija peyarai veliyittal nandraha irukkum !!!

Your Ad Here
An Angry Indian (AAI)
Your Ad Here