Saturday, March 28, 2009

திடீர் ஞானோதயம் - திடீர் அக்கறை

தேர்தல் வந்தாலே இந்த அரசியல் வியாபாரிகளுக்கு திடீர் ஞானோதயமும் திடீர் அக்கறையும் வந்து விடும் என்பதை இந்த தேர்தலும் நிருபித்து விட்டது

தீவுத் தமிழர்கள் மீது வந்த திடீர் அக்கறை :-

வெள்ளி பாலு -- வுண்டியல் குலுக்க ஆரம்பித்து விட்டார்....

அம்மா -- வுண்ணா நோன்பு இருந்து விட்டார்...

மான் மோகன் -- முதல்வருக்கு தொலைபேசியில் பேசுகிறார் ...

ஆப்பு முகர்ஜீ -- தீவுக்கே சென்று வருகிறார்

கசாபிடம் கோட்டை விட்ட கடற் படை தளபதி சொல்கிறார் - நாங்கள் தீவு அரசுக்கு ஆயுதம் தரவில்லை என்று ...

2014 ல் நேரு கட்சியின் பிரதர் வேட்பாளர் சொல்கிறார் - சிறுத்தையுடன் கூட்டணி ஒரு தந்திரம் என்று...

சைகோ சொல்கிறார் - கச்சதீவை திரும்ப வாங்கு என்று ...

மருத்துவர் பல்டி சொல்கிறார் - தீவில் தனி நாடு வேண்டுமென்று ....

தமிழின தலைவர் (?) சொல்கிறார் - தீவு தமிழர்களுக்கு வுயிரையும் குடுப்பேன் என்று ...



இந்த அனைவரையும் தேர்தல் முடிந்த வுடன் தீவு பிரச்னையை பற்றி கேளுங்களேன் .. என்ன சொல்வர் தெரியுமா ??

"அது அப்போ ", "அது போன மாதம்" என்று வெடி வேலு பாணியில் வெளுத்து வாங்குவார்கள் ...

வாழ்க ஜனநாயகம் !!!







Friday, March 27, 2009

திருவாளர் மருத்துவர் பல்டி

பல்டி க்கு புது இலக்கணம் வகுத்தவர் ஒருவர் வுண்டு என்றால் அது மருத்துவர் மட்டுமே. மருத்துவர் யார் என்று கேள்வி கேட்க படாது :-) மருத்துவர் யார் என்று தெரியாதவர்கள் இதற்கு மேல படிக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் :-) ஆரம்பிப்பதற்கு முன்பு சில புள்ளி விவரம் ....

1996 - திவாரி
1998 - அம்மா
1999 - அய்யா
2001 - அம்மா
2004 - அய்யா
2006 - அய்யா
2009 - அம்மா
2011 - ?????

யாரும் மருத்துவரை தவறாக நினைக்க வேண்டாம். திரு டார்வின் அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்கு நமது மருத்துவர் முயற்சி செய்கிறார். அவ்வளவே. அதாவது மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்ற கூற்றை அரசியல் ஆராய்ச்சி மூலம் நிலை நாட்டுகிறார்.

இந்த அரிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகூடம் தமிழ்நாடு. ஆராய்ச்சி கூடத்தில் வுள்ள எலிகள் , புலிகள், நரிகள், நாய்கள் , நண்டுகள் நமது தமிழக மக்கள். ஆராய்ச்சி செய்ய வுபகரணங்கள் எளிதில் கிடைக்கும் போது ஆராய்ச்சியலனை சாட கூடாது.

இந்த முறை பல்டிக்கு அச்சாரம் இட்டது ஆறு மாதத்திற்கு முன்பே. திருவாளர் மாடு வெட்டி குர்ரூ அவர்களின் மாமியார் வீட்டு வாசத்தின் போதே பல்டி முடிவு செய்யப்பட்டு விட்டது. மாடு வெட்டியை வெளியில் விட்டு கூட்டணியை தொடர ஆளும் கட்சி விரும்பினாலும் (தேர்தல் முடியும் வரை :-) ) பல்டி அடிப்பதில் கில்லாடியான நம்மாளு விடுவானா .. அடிச்சான் பாரு இன்னொரு பல்டி..

இப்போ நம்ம திருவாளர் பல்டி எங்க இருக்கார் ? கோபால புறத்து மாடத்துல இருந்து போயஸ் தோட்டம் மாமரதுல .

பொறுங்க பொறுங்க அங்க எவளோ நாள் இருக்கார்னு பார்ப்போம் .. மரத்தில ஏறினா எறங்கி தான ஆகநும்.

வாழ்க ஜனநாயகம் !!!

Sunday, March 22, 2009

Is India Unsafe for Sports?

The IPL Session-2 Fallout will hit the Sports in this country. It proves that India is unsafe to host any sort of sports, the IPL's decision to move the tournament out of India will tarnish India's Image in the long run. But one can understand that this decision came due to the unwillingness of the Central Government and Congress ruling states.

If BJP ruling states can provide security, why not Congress ruling states ? This is going to storm the election campaign, of course it is already started By Narendra Modi and Arun Jaitley. Though the IPL can be seen as the Money Generating business, one cannot deny the fact that India is losing its image as a safe country by allowing the IPL Owners to move the tournament out of the country.

Who is going to save the sports in India?
Your Ad Here
An Angry Indian (AAI)
Your Ad Here