Showing posts with label alliance. Show all posts
Showing posts with label alliance. Show all posts

Friday, March 27, 2009

திருவாளர் மருத்துவர் பல்டி

பல்டி க்கு புது இலக்கணம் வகுத்தவர் ஒருவர் வுண்டு என்றால் அது மருத்துவர் மட்டுமே. மருத்துவர் யார் என்று கேள்வி கேட்க படாது :-) மருத்துவர் யார் என்று தெரியாதவர்கள் இதற்கு மேல படிக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் :-) ஆரம்பிப்பதற்கு முன்பு சில புள்ளி விவரம் ....

1996 - திவாரி
1998 - அம்மா
1999 - அய்யா
2001 - அம்மா
2004 - அய்யா
2006 - அய்யா
2009 - அம்மா
2011 - ?????

யாரும் மருத்துவரை தவறாக நினைக்க வேண்டாம். திரு டார்வின் அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்கு நமது மருத்துவர் முயற்சி செய்கிறார். அவ்வளவே. அதாவது மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்ற கூற்றை அரசியல் ஆராய்ச்சி மூலம் நிலை நாட்டுகிறார்.

இந்த அரிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகூடம் தமிழ்நாடு. ஆராய்ச்சி கூடத்தில் வுள்ள எலிகள் , புலிகள், நரிகள், நாய்கள் , நண்டுகள் நமது தமிழக மக்கள். ஆராய்ச்சி செய்ய வுபகரணங்கள் எளிதில் கிடைக்கும் போது ஆராய்ச்சியலனை சாட கூடாது.

இந்த முறை பல்டிக்கு அச்சாரம் இட்டது ஆறு மாதத்திற்கு முன்பே. திருவாளர் மாடு வெட்டி குர்ரூ அவர்களின் மாமியார் வீட்டு வாசத்தின் போதே பல்டி முடிவு செய்யப்பட்டு விட்டது. மாடு வெட்டியை வெளியில் விட்டு கூட்டணியை தொடர ஆளும் கட்சி விரும்பினாலும் (தேர்தல் முடியும் வரை :-) ) பல்டி அடிப்பதில் கில்லாடியான நம்மாளு விடுவானா .. அடிச்சான் பாரு இன்னொரு பல்டி..

இப்போ நம்ம திருவாளர் பல்டி எங்க இருக்கார் ? கோபால புறத்து மாடத்துல இருந்து போயஸ் தோட்டம் மாமரதுல .

பொறுங்க பொறுங்க அங்க எவளோ நாள் இருக்கார்னு பார்ப்போம் .. மரத்தில ஏறினா எறங்கி தான ஆகநும்.

வாழ்க ஜனநாயகம் !!!
Your Ad Here
An Angry Indian (AAI)
Your Ad Here